பொங்கலுக்கு வரும் சிரஞ்சீவி, நயன்தாரா
கடந்த ஜனவரி மாதம் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘சங்கராந்திகி வஸ்துனம்’ என்ற தெலுங்கு படத்தை அனில் ரவிபுடி இயக்கினார். இது மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதையடுத்து சிரஞ்சீவி நடிக்கும் 157வது படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.
இதற்கு ‘மன சங்கர வரபிரசாத் காரு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹீரோயின்களாக நயன்தாரா, கேத்தரின் தெரசா நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் ‘மீசால பில்லா’ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் 2வது பாடலான ‘சசிரேகா’ தற்போது வெளியாகியுள்ளது. பீம்ஸ் செசிரொலியொ இசை அமைத்துள்ளார். வரும் பொங்கலன்று படம் ரிலீசாகிறது.
