பூஜா ஹெக்டே உடல் நலம் திடீர் பாதிப்பு: வீட்டில் முடங்கினார்
சென்னை: நடிகை பூஜா ஹெக்டே உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் முடங்கியுள்ளார்.சமீபத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் பூஜா ஹெக்டே. இந்நிலையில் மும்பையில் உள்ள தனது பங்களாவில் அவர் கடந்த சில நாட்களாக ஓய்வில் இருக்கிறார். இது குறித்து பூஜா ஹெக்டே கூறும்போது, ‘‘உடல் நலம் திடீரென பாதித்ததால் அதற்கான சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறேன். மும்பை மழையும் எனது பணிகளை நிறுத்திவிட்டது.
அத்துடன் உடல் நலமும் எனக்கு பாதகமாக அமைந்துவிட்டது. சீக்கிரமே இதிலிருந்து மீண்டு வருவேன் என்று எதிர்பார்க்கிறேன்’’ என தெரிவித்துள்ளார். தனது தனது உடல் நிலைக்கு என்ன பாதிப்பு என்பதை பூஜா ஹெக்டே கூறவில்லை. தனது நாய்க்குட்டியை அணைத்தபடி சோகமாக பெட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், பூஜாவுக்கு என்ன ஆச்சு? என கேட்டு வருகிறார்கள்.