தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பிரபாஸ் படத்தில் இணைந்த மிருணாள் தாக்கூர்

ஐதராபாத்: துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சீதா ராமம்’ என்ற பான் இந்தியா படத்தின் மூலம் தென்னிந்தியப் படவுலகில் அறிமுகமானவர், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். ஹனு ராகவபுடி இயக்கிய இப்படத்தில், இளவரசி வேடமேற்று சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மிருணாள் தாக்கூருக்கு தெலுங்கில் பல புதுப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது ஹனு ராகவபுடி...

ஐதராபாத்: துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சீதா ராமம்’ என்ற பான் இந்தியா படத்தின் மூலம் தென்னிந்தியப் படவுலகில் அறிமுகமானவர், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். ஹனு ராகவபுடி இயக்கிய இப்படத்தில், இளவரசி வேடமேற்று சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மிருணாள் தாக்கூருக்கு தெலுங்கில் பல புதுப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது ஹனு ராகவபுடி இயக்கும் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஆக் ஷன் படமான இதில், பாகிஸ்தான் நடிகை சஜல் அலி நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் மிருணாள் தாக்கூரும் இன்னொரு ஹீரோயினாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.