பிரதீப் ரங்கநாதனை உருவகேலி செய்வதா? பத்திரிகையாளருக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ‘டியூட்’ என்ற தமிழ் மற்றும் தெலுங்கு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு பத்திரிகையாளர் பிரதீப் ரங்கநாதனை பார்த்து, ‘நீங்கள் எல்லாம் ஒரு ஹீரோ மெட்டீரியலே கிடையாது. உங்களுக்கு அந்த தோற்றமே இல்லை’ என்று உருவகேலி செய்தார். அதைக்கேட்டு கோபப்படாமல் அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், ‘நான் நடித்த படத்தை பார்க்கும் ரசிகர்கள், உடனே
என்னுடன் தங்களை ‘கனெக்ட்’ செய்துகொள்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், நான் சாதாரண மனிதனை போல் இருப்பதுதான்’ என்றார்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், பிறகு ஹீரோவாக நடித்த ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கொடுத்து, ஒரு முன்னணி ஹீரோவாக இருக்கிறார். அவரை கேலி செய்த பத்திரிகையாளர் கேட்ட கேள்வி சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. வரும் 17ம் தேதி ‘டியூட்’ படம் திரைக்கு வருகிறது. பிரதீப் ரங்கநாதன் ேஜாடியாக ‘பிரேமலு’ மமிதா பைஜூ நடித்துள்ளார். கீர்த்திஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் ஒரு பாடலை பாடியுள்ளார்.