தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பிரீத்தியுடன் கிஸ் சீன் இருக்கா? கவின் சுவாரஸ்யம்

சென்னை: நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ள ‘கிஸ்’ என்ற படம், வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. ‘அயோத்தி’ பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் பிரபு, விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய், ராவ் ரமேஷ், தேவயானி நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கவின் பேசியதாவது: பேண்டசி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்புகிறேன். நாங்கள் கேட்டதற்காக டப்பிங் தியேட்டருக்கு வந்து, பின்னணி குரல் கொடுத்துவிட்டு சென்றார் விஜய் சேதுபதி. அவருக்கு நன்றி. ‘கிஸ்’ படத்தின் கதையை விஜய் சேதுபதி விவரிக்கிறார். ‘அயோத்தி’ படத்துக்கு பிறகு பிரீத்தி அஸ்ரானிக்கு இப்படம் நன்கு ைககொடுக்கும். அவருக்கும், எனக்கும் கிஸ் சீன் இருக்கிறதா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.