தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கர்ப்பமாக இருப்பதாக கடைக்காரரை ஏமாற்றிய ரெஜினா

சென்னை: தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடிக்கும் ரெஜினா, சமீபத்தில் அளித்த பேட்டி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், ‘இனிப்பு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருமுறை நான் பெங்களூருவில் இருந்தபோது, எனக்கு மிகவும் பிடித்த ‘மிஸ்தி டோய்’ சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

அதை தேடி பல கடைகளுக்கு சென்றேன். அது எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு கடையில் அந்த இனிப்பை பார்த்தபோது நேரமாகிவிட்டதால் அந்த ஊழியர் கடையை மூடிக்கொண்டு இருந்தார். இதனால் வேறு வழியில்லாமல், ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்று அவரிடம் பொய் சொன்னேன். அந்த பொய்யின் மூலம் எனக்கு அந்த இனிப்பு கிடைத்தது’ என்று தெரிவித்துள்ளார்.