கிறிஸ்துமசுக்கு வெளியாகும் சிறை
சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார் நடித்துள்ள படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜீ5 நிறுவனம் ஓடிடி உரிமம் வாங்கியுள்ளது.