பிரித்விராஜ் தாத்தாவாக மோகன்லால்
சென்னை: பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘கலீஃபா’. சமீபத்தில் படக்குழு அறிவித்தது போல, இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் The Intro, இரண்டாம் பாகம் His Reign என பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் அடுத்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், பிரித்விராஜ் மற்றும் மோகன்லால் முன்பு ‘லூசிஃபர்’ படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படம் வெளியானதும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ப்ரோ டாடி படத்திலும் இவர்கள் சேர்ந்து நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் பிரித்விராஜின் தாத்தாவாக மோகன்லால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
