தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பிருத்விராஜுடன் இணைந்தார் டிஎஸ்கே

சென்னை: ‘லப்பர் பந்து’ படத்தில் கவனிக்கத்தக்க நெகடிவ் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார் டிஎஸ்கே. ரசிகர்களிடம் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது வெளியாகியுள்ள ‘பாம்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று நடித்துள்ளார் டிஎஸ்கே. ‘லப்பர் பந்து’ படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

டிஎஸ்கே கூறும்போது, ‘‘விலாயத் புத்தா’ என்கிற மலையாள படத்தில் முன்னணி ஹீரோவான நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து, அவரது நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாள படம் என்றாலும் இந்த படத்தில் நான் தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன்.

தமிழ் சினிமாவில் குணசசித்திர கதாபாத்திரம் பண்ணுகின்ற நடிகர்கள், அதிலும் 35 வயதுக்கு உட்பட்ட நடிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கான தேவையும் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு இடத்தை எனக்கென நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் தான் நான் தீவிரமாக இருக்கிறேன். இப்போது டியர் ஜீவா, ஹி இஸ் பிரக்னண்ட் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் அருள்நிதி, அமீர் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கிறேன்’’ என்றார்.