பிகினிக்கு மாறிய பிரியா வாரியர்
கடந்த 2019ல் வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில், கண் சிமிட்டல் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர். பிறகு தெலுங்கில் ‘செக்’, ‘இஷ்க்’ ஆகிய படங்களில் நடித்த அவர், இந்தியில் ‘யாரியான் 2’ என்ற படத்தில் நடித்தார். தமிழில் தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்திலும், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ என்ற படத்திலும் நடித்தார்.
தற்போது ‘3 மங்கீஸ்’, ‘லவ் ஹாக்கர்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் பிரியா பிரகாஷ் வாரியர், அடிக்கடி அவுட்டிங் சென்று, அப்போது எடுத்த போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது வியட்நாம் டனாங்கிலுள்ள ஒரு ரிசார்ட்டில் பொழுதுபோக்கி வருகிறார். அங்கு பிகினி உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகியுள்ளது.
