தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

டிரெண்டிங்கில் நடிக்க பயந்த பிரியாலயா

ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரிக்க, சிவராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, அலெக்சாண்டர், வித்யா போர்கியா, ஷிவன்யா பிரியங்கா, கவுரி நடித்துள்ள திரில்லர் படம், ‘டிரெண்டிங்’. பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். குட்டி ரேவதி, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளனர்....

ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரிக்க, சிவராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, அலெக்சாண்டர், வித்யா போர்கியா, ஷிவன்யா பிரியங்கா, கவுரி நடித்துள்ள திரில்லர் படம், ‘டிரெண்டிங்’. பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். குட்டி ரேவதி, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 18ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து பிரியாலயா கூறுகையில், ‘இப்படத்துக்கான ஆடிஷன் முடிந்தபோது, சந்தோஷத்தை விட பயம்தான் அதிகமாக இருந்தது. ஆக்டிங் ஸ்கோப் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு இதில் பலித்துள்ளது.

கலையரசன் மிகவும் திறமையான நடிகர். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த எண்ணமும் தற்போது நிறைவேறியுள்ளது. இது ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் படம். இதில் நடித்தது உண்மையிலேயே நல்லதொரு அனுபவமாக இருந்தது. சாம் சி.எஸ் மிக அற்புதமாக இசை அமைத்துள்ளார். சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும்’ என்றார். கலையரசன் பேசும்போது, ‘இது என் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும்.

நான் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளேன் அவற்றில் இப்படம் வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும். அலெக்சாண்டர் என்ற நடிகர் படம் முழுக்க முகமே ெதரியாமல் நடித்துள்ளார். அவர்தான் இப்படத்தின் ஆதாரம்’ என்றார். கலையரசன் மனைவி பிரியா, இப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.