ஓடிடியில் அறிமுகமாகும் பிரியங்கா
சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடித்து இன்று வெளியாகியுள்ள படம், ‘தே கால் ஹிம் ஓஜி’. ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இதில், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜூன் தாஸ் நடித்துள்ளனர். பவன் கல்யாணுடன் முதல்முறையாக பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளதால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழில் கடைசியாக தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய பிரியங்கா மோகன், அடுத்து கவின் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ஓடிடியில் அறிமுகமாகும் பிரியங்கா மோகன், முன்னதாக எந்தவொரு வெப்தொடரிலோ அல்லது நேரடி ஓடிடி படத்திலோ நடித்தது இல்லை.