பிரச்னைகளை தீர்த்து வைக்கும் பூங்கா
அழகு மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம், ‘பூங்கா’. கவுசிக், ஆரா, சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி.தனசேகர் இயக்கியுள்ளார். ஆர்.ஹெச்.அசோக் ஒளிப்பதிவு செய்ய, அகமது விக்கி இசை அமைத்துள்ளார். முகன்வேல் எடிட்டிங் செய்ய, குணசேகர் அரங்கம் அமைத்துள்ளார்.
எஸ்.ஆர்.ஹரி முருகன் சண்டைப் பயிற்சி அளிக்க, சுரேஷ் சித் நடனக்காட்சி அமைத்துள்ளார். கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் இணைந்து தயாரித்துள்ளனர். ‘பூங்கா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள். பூங்கா என்பது மண் மீதுள்ள சொர்க்கம்.
4 பேர் நிறைய பிரச்னைகளுடன் பூங்காவுக்கு வருகின்றனர். அங்கு அவர்களின் பிரச்னை தீர்ந்ததா என்பது கதை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒரிஜினல் பூங்காவில் நடத்தினோம். ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த ‘லவ் டுடே’ படத்தின் இயக்குனர் பாலசேகரன், நகைச்சுவை நடிகர் ஜாவா சுந்தரேசன் என்கிற சாம்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்’ என்றார் இயக்குனர்.