தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தயாரிப்பாளராகும் சிம்ரன்

மும்பையில் பிறந்து வளர்ந்து தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். கடந்த 2003ம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பிறகு கேமியோ ரோல் அல்லது கெஸ்ட் அப்பியரன்ஸ்களில் மட்டும் நடித்து வந்தார். ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடியிருந்தார்....

மும்பையில் பிறந்து வளர்ந்து தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். கடந்த 2003ம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பிறகு கேமியோ ரோல் அல்லது கெஸ்ட் அப்பியரன்ஸ்களில் மட்டும் நடித்து வந்தார். ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடியிருந்தார். அதன்பிறகு ‘சீமராஜா’, ‘பேட்டை’, ‘மகான்’ போன்ற படங்கள் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரசாந்த்துடன் ‘அந்தகன்’, அஜித்துடன் ‘குட் பேட் அக்லி’, ஆதி நடித்த ‘சப்தம்’ மற்றும் சசிகுமாருடன் சேர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் நடித்தார்.

இதில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்காக பலரது பாராட்டுக்களை பெற்றார் சிம்ரன். இந்நிலையில், நடிப்பில் கலக்கிவரும் சிம்ரன் அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க போகிறார். ‘போர் டி மோஷன் பிக்சர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் சிம்ரன். இந்நிறுவனம் சார்பில் திரில்லர், ஆக்ஷன் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தினை சிம்ரன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஷியாம் டைரக்ட் செய்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பெயர் மற்றும் இதர தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.