தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பழமொழி பின்னணியில் அறுவடை கதை

சென்னை: ‘லாரா’ திரைப்படத்தை தொடர்ந்து எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பான ‘அறுவடை’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் ‘பருத்திவீரன்’ சரவணன், ராஜசிம்மன் தீபா, கவிதா ஆகியோர்...

சென்னை: ‘லாரா’ திரைப்படத்தை தொடர்ந்து எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பான ‘அறுவடை’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் ‘பருத்திவீரன்’ சரவணன், ராஜசிம்மன் தீபா, கவிதா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். ஆர். ஜே. ரவீன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரகு சரவணக்குமார் இசையமைக்கிறார். இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ‘’ ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சனை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு ‘அறுவடை’ என பெயரிட்டிருக்கிறோம். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ளோம் ‘’ என்றார்.