உளவியல் திரில்லரில் ஸ்மிருதி வெங்கட்
வழக்கமான திரில்லர் கதைகளில் இருந்து மாறுபட்டு, முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’, இன்று முதல் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகிறது. உளவியல் திரில்லரான இதை மிதுன் பாலாஜி இயக்கியுள்ளார். கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளனர். 40 நிமிட குறும்படமாக இருந்த இக்கதை, ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் திரைக்கதையாக்கத்துக்கு பிறகு திரைப்படமானது. இதுகுறித்து மிதுன் பாலாஜி கூறுகையில், ‘படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக எனது தந்தை அவரது சேமிப்பில் இருந்து நிதி ஒதுக்கிக்கொடுத்தார்.
அதோடு சேர்த்து இயக்கம், எழுத்து, தயாரிப்பு, எடிட்டிங் போன்ற பணிகளை நான் மேற்கொண்டேன்’ என்றார். நடிகரும், இணை எழுத்தாளருமான கோமதி சங்கர் கூறுகையில், ’கதையை எழுதுவதில் நானும் பங்களித்து இருப்பதால், அந்த கதாபாத்திரத்துடன் என்னால் அழுத்தமாக இணைத்துக்கொள்ள முடிந்தது. ஒரு நடிகனாக இதில் நடித்திருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது’ என்றார்.
