தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

புகழ் கதாநாயகனாக நடிக்கும் 'மிஸ்டர் ஜு கீப்பர்' படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் வெளியீடு

தமிழில் 'வேலை, என்னவளே, ஜூனியர் சினியர்' ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் புகழ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'மிஸ்டர் ஜு கீப்பர்'. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் 'டிக்கிலோனா' படத்தில் கதாநாயகியாக நடித்த ஷிரின் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் வெளியிட்டார்கள். நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சுரேஷ், கதாநாயகி ஷிரின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழும் உடன் இணைய நிகழ்ச்சி போட்டியாளர்கள், மற்ற கோமாளிகள் புகழையும் படக்குழுவினரையும் வாழ்த்தினர்.

இரண்டாவது பார்வை போஸ்டரை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகழ், "என் கனவை நினைவாக்கிய படம், முதல்முறையாக திரையில் கதையின் நாயகனாக நான். நிஜ புலியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இசை அமைத்து கொடுத்த யுவன் சாருக்கு என் மிகப்பெரிய நன்றிகள். என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் ரசிகர்களுக்கு நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்," என கேட்டுக் கொண்டுள்ளார்.