தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

‘ரா’வில் நடந்த நிஜ சம்பவம் மிஸ்டர் எக்ஸ்

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘எஃப்ஐஆர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அதே நிறுவனத்துக்காக ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் மனு ஆனந்த். அவர் கூறியது: உளவுத்துறை அமைப்பின் பின்னணியில் உருவான கதை இது. முழுக்க உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எழுதி, இயக்கியுள்ளேன். சில வருடங்கள் முன் நியூக்ளியர் டிவைஸ் ஒன்று தொலைந்துபோனது. அதை தேடிச் செல்லும் குழுவினரின் கதை இது. அதற்குள் மேலும் சில சம்பவங்களின் தொகுப்பாக இந்த படம் இருக்கும். ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கவுதம் கார்த்திக், அனகா, அதுல்யா, ரைசா வில்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். அருண் வின்சென்ட் ஒளிப்பதிவு. திபுநினன் தாமஸ் இசை. ஸ்டன்ட் சில்வாவின் ஆக்‌ஷன் பெரிதும் பேசப்படும். வழக்கமாக உலக செய்திகள் அனைத்தையும் நான் ஃபாலோ செய்வேன். அதுபோல் நான் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளேன். இதில் ‘ரா’ ஏஜென்ட்டாக முன்னணி கதாபாத்திரங்கள் நடித்துள்ளன. எஃப்ஐஆர் படத்தின்போது எந்த மதத்தையும் நாங்கள் தவறாக காட்டவில்லை. ஆனாலும் முஸ்லிம்கள், இந்துக்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. இந்த படத்தில் எந்த மதத்தையும் பற்றி படத்தில் காட்சிகள் இருக்காது என்றார்.