ரேபிஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகை ரேணு தேசாய்: வெறிநாய் கடித்துவிட்டதா? ரசிகர்கள் அதிர்ச்சி
ஐதராபாத்: நடிகையும், விலங்குகள் நல ஆர்வலருமான ரேணு தேசாய், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி. நேற்று ரேணு தேசாய் தனக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் அவருக்கு வெறிநாய் கடி ஏற்பட்டுவிட்டதோ என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.
விலங்குகள் நல ஆர்வலரான அவர், விலங்குகள் காப்பகம் நடத்தி வருவதாகவும், விலங்குகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுபவர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் மீட்பாளர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தவே இந்த வீடியோவை வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார்.