தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தயாரிப்பாளரை தாக்கிய ராதிகா ஆப்தே

  இந்தி, பெங்காலி, மராத்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே (39), கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருக்கும்போது பணியாற்றிய நேரங்களில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பாகுபாடுகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘நான் பணியாற்றிய ஒரு இந்திய தயாரிப்பாளர், எனது கர்ப்பம் குறித்த செய்தி...

 

இந்தி, பெங்காலி, மராத்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே (39), கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருக்கும்போது பணியாற்றிய நேரங்களில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பாகுபாடுகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘நான் பணியாற்றிய ஒரு இந்திய தயாரிப்பாளர், எனது கர்ப்பம் குறித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடையவில்லை. எனக்கு அசவுகரியமாக இருந்த நேரத்திலும், இறுக்கமான உடைகள் அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் முதல் மூன்று வாரங்களில் இருந்தபோது, தொடர்ந்து கடுமையான பசியுடன் காணப்பட்டேன். அப்போது அதிகமாக சாப்பிட்டதால், எனது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றை புரிந்துகொள்வதற்கு பதிலாக, உணர்ச்சியற்ற மனப்பான்மையை எதிர்கொண்டேன்.

படப்பிடிப்பில் அசாதாரணமாக உணர்ந்தபோது கூட டாக்டரை பார்க்க அனுமதிக்கவில்லை. இது எனக்கு அதிக ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால், நான் பணியாற்றிய ஹாலிவுட் இயக்குனர் எனக்கு ஆதரவாக இருந்தார். வழக்கத்தை விட நான் அதிகமாக சாப்பிடுவதாகவும், படப்பிடிப்பு முடியும்போது முற்றிலும் வேறொரு தோற்றத்தில் இருக்கலாம் என்றும் அவரிடம் நான் சொன்னபோது, அவர் சிரித்துக்கொண்டே, `கவலைப்படாதே. நீ வேறொரு நபராக இருந்தாலும் பரவாயில்லை. இப்போது நீ ஒரு கர்ப்பிணி’ என்று சொன்னார். அவரது புரிதல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. நான் அதிக சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. எனது தனிப்பட்ட மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தபோது, குறைந்தபட்ச மனிதாபிமானத்தையும், கருணையும் மட்டுமே எதிர்பார்த்தேன்’ என்றார்.