தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கிளாமருக்கு மாறிய ராய் லட்சுமி

கடந்த 2005ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி, தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் நடித்தார். பல முன்னணி ஹீரோக்களுக்கு ேஜாடியாக நடித்தாலும், அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குவியவில்லை. நியூமராலஜிப்படி ‘லட்சுமி ராய்’ என்ற தனது பெயரை ‘ராய் லட்சுமி’ என்று...

கடந்த 2005ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி, தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் நடித்தார். பல முன்னணி ஹீரோக்களுக்கு ேஜாடியாக நடித்தாலும், அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குவியவில்லை. நியூமராலஜிப்படி ‘லட்சுமி ராய்’ என்ற தனது பெயரை ‘ராய் லட்சுமி’ என்று மாற்றிக்கொண்டார். இந்தியில் அறிமுகமாகி, பாலிவுட் கைகொடுக்கும் என்று பெரிதும் நம்பினார். கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், கவர்ச்சியில் தாராளம் காட்ட முடிவு செய்தார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘கைதி நம்பர் 150’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கிளாமராக நடனமாடினார். அதற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து சில படங்களில் கவர்ச்சி நடனமாடினார்.

தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், போட்டோஷூட் செய்து, அந்த போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் லண்டன் சென்ற ராய் லட்சுமி, அங்குள்ள பிக்பென் என்ற இடத்தில் நின்று விதவிதமாக போஸ் கொடுத்தார். சிவப்பு நிற கவுனில் அவரது போஸைப் பார்த்த நெட்டிசன்கள், ‘புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால், இப்படி துணிச்சலுடன் கிளாமர் போஸ் கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டு நச்சரித்து வருகின்றனர். வழக்கம்போல் ராய் லட்சுமி பதிலளிக்காமல் மவுனமாக இருக்கிறார்.