ராஜ் அய்யப்பா ஜோடியானார் ஷ்ரிதா
சென்னை: நடிகர் ராஜ் அய்யப்பா எம். நடிப்பில், அறிமுக இயக்குநர் ராஜன் ரவி இயக்கும் புதிய படம் நேற்று துவங்கியது. ராஜன் ரவியின் முதல் இயக்கமாக உருவாகும் இப்படத்தினை, மிஸ்டர் பிக்சர்ஸ் ஸ்டுடியோ ஆர்.ஜெயலக்ஷ்மி மற்றும் கன்தாரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ராஜ் அய்யப்பா எம். நாயகனாக நடிக்கிறார். ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ஸ்ரீநாத், சௌந்தர்யா சரவணன், சிபி ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படக்குழுவினர் கலந்துகொள்ள பிரமாண்ட பூஜையுடன் இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.
இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் எக்ஸட்ரா மதியழகன் கலந்து கொண்டார். தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவு - கிரண் குமார், இசை - பாலா சுப்பிரமணியன், எடிட்டர் - டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்குனர் - லக்ஷ்மனன் கோபி, காஸ்ட்யூம் டிசைனர் - டீனா ரொசாரியோ, எக்சிகியூடிவ் புரொடியூசர் - விக்கி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் மற்ற விபரங்கள் வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்துக்கு தற்போது புரொடக்ஷன் நம்பர் 1 என்ற தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.