தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் ராணா

சென்னை: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் இந்தி திணிப்பு தொடர்பாக நடந்த உண்மையான சம்பவங்களை வைத்து தான் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம் தான் ‘பராசக்தி’ படத்தின் கதை என சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற...

சென்னை: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் இந்தி திணிப்பு தொடர்பாக நடந்த உண்மையான சம்பவங்களை வைத்து தான் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம் தான் ‘பராசக்தி’ படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் இந்தி திணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதையெல்லாம் இயக்குனர் சுதா கொங்கரா ‘பராசக்தி’ படத்தில் காட்டியிருப்பதாக தெரிகிறது. அதற்காக தான் மலையாளத்தில் இருந்து பசில் ஜோசப், கன்னடத்தில் இருந்து தனஞ்சயா ஆகியோரை இப்படத்தில் சுதா கொங்கரா நடிக்க வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் இருந்து ராணாவை நடிக்க தேர்வு செய்துள்ளார். கதைப்படி கேரளா நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு பசில் ஜோசப் தலைமை தாங்குவதாகவும், அதுபோல ஆந்திரா போராட்டத்திற்கு ராணா தலைமை தாங்குவதாகவும் காட்சிகள் படத்தில் இடம்பெற உள்ளது.