ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ரகசிய நிச்சயதார்த்தம்
ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக செய்தி பரவியது. இருவரும் இணைந்து அவுட்டிங் செல்வது, வெளிநாடுகளுக்கு டிரிப் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘‘நான் திரைத்துறையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறேன்” என விஜய் தேவரகொண்டா பேசியிருந்தார். ஆனால் இதுவரை தங்களது காதலை இருவரும் வெளிப்படையாக உறுதிசெய்யவில்லை. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள துபாய் சென்ற ராஷ்மிகா, விமான நிலையத்தில் நீல நிற பேன்ட் மற்றும் வெள்ளை நிற சட்டையில் எளிமையான தோற்றத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அப்போது அவர் கை விரலில் அணிந்திருந்த வைர மோதிரம் கவனம் பெற்றது.
காரில் இருந்து இறங்கிய ராஷ்மிகா மந்தனா, கேமராக்களுக்கு கையசைத்து போஸ் கொடுத்தார். இந்த நேரத்தில் ராஷ்மிகாவின் விரலில் அணிந்திருந்த மோதிரம் கேமராவில் பதிவானது. சில நிமிடங்களில் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதன்மூலம் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்களா? அது நிச்சயதார்த்த மோதிரமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் இருவரது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து முடிந்துவிட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.