ரவி மோகன், கெனிஷா திருப்பதியில் தரிசனம்
திருமலை: நடிகர் ஜெயம்ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார். இந்நிலையில் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த சுப்ரபாத சேவையில் ரவிமோகனும், அவரது தோழியுமான பாடகி கெனிஷாவும் ஜோடியாக தரிசனம் செய்தனர். தரிசனம் செய்துவிட்டு கோயிலுக்கு வெளியே இருவரும் ஒன்றாக சேர்ந்து வந்தனர். புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்தனர்.