கமல்ஹாசன் கேட்டால் நடிக்க தயார்: ஸ்ருதிஹாசன்
சென்னை: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ என்ற படத்தில் பாடியுள்ள அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில், ‘ரஜினி சாருடன் நான் நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கான டப்பிங் நடக்கிறது. இப்படம் மிகச்சிறப்பாக உருவாகி யுள்ளது. அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். அப்பா கமல் நடித்த ‘தக் லைஃப்’ படத்தின் பாடலை பாடுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி. அப்பா படத்தில் பாடியதை நினைத்து சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
ஜூன் 5ம் தேதி வெளியாகும் இப்படத்தின் முதல் காட்சியை, சென்னையிலுள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசிப்பேன். ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் அப்பா கமல் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். அவர் கேட்டால் உடனே கால்ஷீட் கொடுப்பேன்’ என்றார். கமல்ஹாசன் இந்தியில் நடித்த ‘சாச்சி 420’, தமிழில் நடித்த ‘ஹே ராம்’ ஆகிய படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.