தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

‘ரெட் லேபிள்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

கோயம்புத்தூர் பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையையும், அதை சார்ந்த சம்பவங்களையும் மையமாக வைத்து உருவான சஸ்பென்ஸ் திரில்லர் படம், ‘ரெட் லேபிள்’. கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரிக்க, பொன்.பார்த்திபன் கதை எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசை அமைக்க, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார். ஹீரோவாக லெனின், ஹீரோயினாக அஸ்மின் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் ஆர்.வி.உதயகுமார், முனீஷ்காந்த் நடித்துள்ளனர். ‘ரெட் லேபிள்’ என்ற தலைப்பை பார்த்துவிட்டு, இது டீ அல்லது மது வகையின் பெயர் என்று நினைக்கலாம். ரெட் என்பது புரட்சியையும், லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். அந்தவகையில் தனது அடையாளத்தை தேடும் பல மனிதர்களின் கதையாக இப்படம் இருக்கும். இதன் பர்ஸ்ட் லுக்கை சிம்ரன் வெளியிட்டு வாழ்த்தினார்.