ரேக்ளா பந்தயத்தில் ஸ்ரீதேவி தம்பி
மறைந்த ஸ்ரீதேவியின் சித்தி மகள் ‘கருத்தம்மா’ மகேஸ்வரி, திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார். அவ்வப்போது டி.வி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்கிறார். அவரது தம்பி உதய் கார்த்திக், சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு ‘டைனோசர்ஸ்’, ‘ஃபேமிலி படம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது அவர் நடிக்கும் படம், ‘சோழநாட்டான்’. செவன்...
மற்றும் சவுந்தரராஜன், சுவேதா கர்ணா, நரேன், சீதா, பரணி, விக்னேஷ் நடிக்கின்றனர். தஞ்சை மண்ணின் சிறப்பை சொல்லும் வகையில் படம் உருவாகிறது. ரேக்ளா பந்தயத்தை மட்டுமின்றி, மலைவாழ் மக்களின் பெருந்துயரத்தையும் படம் தோலுரித்து காட்டுகிறது. எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, எஃப்.எஸ்.ஃபைசல் இசை அமைக்கிறார். வி.பாரிவள்ளல் இணை தயாரிப்பு செய்கிறார். யுகபாரதி சபரீஷ், மணி அமுதன் பாடல்கள் எழுதுகின்றனர்.