தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விமர்சனம்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர், மக்கள் நலனுக்கான புராஜெக்டில் தீவிரமாக செயல்படுகிறார். அதற்கு முன்பு ஒரு புராஜெக்டில் வெற்றிபெற்றதை மது விருந்து வைத்து கொண்டாடுகிறார். அப்போது அவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதால் இறந்துவிடுகிறார். கொலையாளி யார்? அவரை சுட என்ன காரணம் என்பது மீதி கதை. ஆராய்ச்சியாளராக வரும் ரவி பிரகாஷ் இயல்பாக நடித்துள்ளார். கொலையாளியை கண்டுபிடிக்கும் காவல்துறை உயரதிகாரி யுவன் மயில்சாமி கம்பீரத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆராய்ச்சியாளரிடம் ரூ.100 கோடி கேட்டு மிரட்டும் வெங்கடேஷ் ரவிச்சந்திரனின் வில்லத்தனம் வித்தியாசமானது.

மற்றும் குழந்தை நட்சத்திரம் தமிழினி, சேரன் ராஜ், சாப்ளின் பாலு, நித்தின் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர். கதைக்கு ஏற்ப ஏ.இ.பிரஷாந்த் அதிரடி பின்னணி இசையை வழங்கியுள்ளார். ‘கார்முகில் மேகம்’ என்ற பாடல் தாலாட்டுகிறது. யார் யாரையோ சந்தேகப்பட வைத்து, கடைசியில் எதிர்பாராத ஒருவரை குற்றவாளியாக்கி, விறுவிறுப்பான கிரைம் திரில்லர் அனுபவத்தை இயக்குனர் மனோஜ் கார்த்தி கொடுத்துள்ளார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.