தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விமர்சனங்களை எதிர்கொள்ள பழகிவிட்டேன்: ரைசா வில்சன்

சென்னை: தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2’, ‘பியார் பிரேமா காதல்’, ‘தனுசு ராசி நேயர்களே’, ‘வர்மா’, ‘எஃப்ஐஆர்’, ‘பொய்க்கால் குதிரை’, ‘காஃபி வித் காதல்’, ‘கருங்காப்பியம்’ ஆகிய படங்களில் நடித்தவர், ரைசா வில்சன். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அவர்...

சென்னை: தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2’, ‘பியார் பிரேமா காதல்’, ‘தனுசு ராசி நேயர்களே’, ‘வர்மா’, ‘எஃப்ஐஆர்’, ‘பொய்க்கால் குதிரை’, ‘காஃபி வித் காதல்’, ‘கருங்காப்பியம்’ ஆகிய படங்களில் நடித்தவர், ரைசா வில்சன். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது:

மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். அப்போது இருந்த பயம் இப்போது இல்லை. இத்தனை வருடங்களில் நான் பெற்ற அனுபவம்தான் இதற்கு காரணம். எனது திரைப்பயணம் எளிதானது இல்லை. வெற்றியும், தோல்வியும் எனக்கு நிறைய அனுபவங்களை கொடுத்தது. என்னை பற்றிய கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள பழகி விட்டேன். நீச்சல் குளத்தில் நான் பிகினி அணிவதை கூட கடுமையாக விமர்சித்தனர். படிக்கும்போது யார் மீதும் காதல் வரவில்லை.

இப்போது எனக்கு பொருத்தமான காதலை எதிர்பார்க்கிறேன். ஆனால், உண்மையாக காதலிக்க யாரும் இல்லை. நான் எதிர்பார்க்கும் மாப்பிள்ளை பொறுமையாக, மனிதநேயம் கொண்டவராக, குடும்பத்தினரை பாதுகாப்பவராக, அறிவாளியாக இருக்க வேண்டும். தோற்றத்தில் கவர்ந்திழுக்க வேண்டிய அவசியம் இல்லை. யார், எப்படி நடிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். கதைக்கு தேவைப்பட்டால் கிளாமராக நடிக்கலாம்.