தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த மோதிரம்

 

ஐதராபாத்: இந்திய அளவில் புகழ்பெற்ற நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா. நீண்ட நாள் காதலர்களான அவர்கள், சமீபத்தில் ரகசிய நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், வரும் பிப்ரவரி மாதம் அவர்களின் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் ‘கீத கோவிந்தம்’ என்ற தெலுங்கு படத்தில் முதல்முறையாக ேஜாடி சேர்ந்து நடித்தனர். பிறகு ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் ஜோடி சேர்ந்தனர். அப்போது முதல் அவர்கள் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால், அதுகுறித்து இருவரும் வெளிப்படையாக அறிவிக்வில்லை.

ஆனால், சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா புடவையில் இருக்கும் தனது போட்டோவை பகிர்ந்தார். நெற்றியில் குங்குமத்துடன் பாரம்பரிய உடையில் அவர் வெளியிட்ட அந்த போட்டோ வைரலாகி வந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவும் மோதிரம் அணிந்திருந்த போட்டோ மற்றும் ராஷ்மிகா மந்தனா மோதிரம் அணிந்த வீடியோ வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு, இச்செய்தி

இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.