தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ரிஷப் ஷெட்டி தந்த வாய்ப்பு சம்பத்ராம் நெகிழ்ச்சி

சென்னை: ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்க, சம்பத்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மேக்கப்பிற்காக மட்டும் தினமும் இரண்டரை மணி நேரம் ஒதுக்க வேண்டியிருந்ததாக கூறியுள்ளார் சம்பத்ராம்,தொடர்ந்து அவர் கூறும்போது, “மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கிற ‘காந்தாரா சாப்டர் 1’-இல் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மலைவாழ் மக்களின் தலைவனாக குறைவான காட்சிகளில் மட்டுமே வந்தாலும், நிறைவாகவும் பெருமையாகவும் நினைக்கிறேன். இந்த படம் மூலம் ரிஷப் ஷெட்டி எனக்கு பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார்” என்றார்.