தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார் ரோபோ சங்கர்

சென்னை: படப்பிடிப்பில் நடிகர் ரோபோ சங்கர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனுஷின் ‘மாரி’ படம் மூலம் திரையுலகில் காமெடியனாக அறிமுகமானவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்ததால் பிசி நடிகர் ஆனார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு மஞ்சள் காமாலை வந்து படுத்த படுக்கையானார். அதுமட்டுமின்றி குடிக்கு அடிமையாகி இருந்ததால் அவர் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டு, மெலிந்து போனார். சென்னையில் சினிமா ஷூட்டிங் ஒன்றில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு நடித்து வந்திருக்கிறார் ரோபோ சங்கர். அப்போது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தார் ரோபோ சங்கர். இதனால் பதறிப்போன படக்குழுவினர் அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.