ரோபோ சங்கர் அம்பியா? அந்நியனா?
சென்னை: ரோபோ சங்கர் நடித்த ‘அம்பி’ படம் இன்று ரிலீசாகிறது. டி2 மீடியா சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்தில் ஹீரோயினாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏ.பி.முரளிதரன் இசை. எழுதி இயக்கி இருக்கும் பாஸர் ஜே.எல்வின் பேசியது: இந்த கதையின் நாயகன் ரோபோ சங்கர், படத்தில் அம்பியாக, அப்பாவியாக இருக்க அவனை சுற்றி உள்ளவர்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் தான் அனைத்தும் நடந்தது அவன் பெரிய வீரன் என நம்புகிறார்கள். அவர் அம்பியாக இருந்தாரா இல்லை அன்னியனாக மாறினாரா என்பதை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவை நிறைந்த படமாக உருவாக்கி இருக்கிறோம்.