ரொமான்ஸ் எனக்கு செட்டாகாது: ஸ்ரத்தா ஸ்ரீநாத்
சென்னை, செப்.22: பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது தமிழில் ‘ப்ரோ கோட்’, ‘ஆர்யன்’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:சில நடிகைகள் முன்னணி நடிகர்கள் மற்றும் இதர நடிகர்களின் படங்களில் காதல் காட்சிகள் இருந்தால், அதில் தயங்கமால் நடித்துவிடுகின்றனர். ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் படங்கள் எனக்கு செட்டாகாது என்ற ஒரே காரணத்தால், அதுபோன்ற கதாபாத்திரம் கொண்ட படங்கள் வந்தாலும், அதிலிருந்து விலகிவிடுகிறேன். பலமுறை இதுபோன்ற கதாபாத்திரம் கொண்ட படங்கள் எனக்கு வந்துள்ளன.
என்னால் நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறேன். படத்தின் கதைக்கு ஏற்ப நல்ல கதாபாத்திரம் அமைந்த படங்களில் நடிக்க மட்டுமே எனக்கு விருப்பம் இருக்கிறது. இதுவரை எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் நல்ல படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்திருப்பதாக நான் நம்புகிறேன். தொடர்ந்து எனக்கு பிடித்த கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். இது உறுதி.