கனகவதியாக மாறிய ருக்மணி வசந்த்
நேற்று வரலட்சுமி பூஜையையொட்டி, ஹோம்பாலே பிலிம்ஸ் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ என்ற பான் இந்தியா படத்தில், ‘கனகவதி’ என்ற கதாபாத்திரத்தை ஏற்றுள்ள ருக்மணி வசந்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். ‘காந்தாரா’ படத்தின் முன்கதையை சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. அர்விந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்ய, பி.அஜ்னீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார்.
கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. கன்னட நடிகையான ருக்மணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதி ேஜாடியாக ‘ஏஸ்’ என்ற படத்தில் நடித்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார்.