சிவகார்த்திகேயனுக்கு ஐஸ் வைத்த ருக்மணி
கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்த ருக்மணி வசந்த், விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மதராஸி’ என்ற படத்தில் நடித்துள்ளார். கைவசம் தெலுங்கில் ‘டிராகன்’, பான் இந்தியா மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் ‘தி டாக்ஸிக்’, பான் இந்தியா மொழிகளில் ‘காந்தாரா: சாஃப்டர் 1’ ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் ‘மதராஸி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ருக்மணி வசந்த், ‘இது அனைவருக்கும் பிடிக்கும் ஸ்பெஷலான படமாக இருக்கும். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்றும் சொல்லலாம்.
மாலதி என்ற கேரக்டரை, என்மீது நம்பிக்கை வைத்து கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு நன்றி. ஒரு படத்தை உருவாக்க தொடர்ந்து அவர் அளிக்கும் உழைப்பு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சிவகார்த்திகேயனின் அங்கீகரிக்கப்பட்ட ஃபேன் கேர்ள். எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. எனது தொடக்க காலத்திலேயே அளவற்ற அன்பை வாரி வழங்கினீர்கள். தொடர்ந்து இதே ஆதரவை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று ஐஸ் வைத்தார்.