தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அஜித் போட்டோ மூலம் பரவிய வதந்தி

சமீபத்தில் நண்பர்கள் தினத்தையொட்டி சோஷியல் மீடியாவில் வெளியான அஜித் குமாரின் ஒரு போட்டோ, பல்வேறு வதந்திகள் பரவுவதற்கு முக்கிய காரணமாகி விட்டது. காரணம், அந்த போட்டோவில் 3 இயக்குனர்கள் இருந்தனர். அதை வைத்து, அஜித் குமாரின் அடுத்த 3 படங்களின் இயக்குனர்கள் இவர்கள்தான் என்று கொளுத்தி போட்டுவிட்டனர். ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய...

சமீபத்தில் நண்பர்கள் தினத்தையொட்டி சோஷியல் மீடியாவில் வெளியான அஜித் குமாரின் ஒரு போட்டோ, பல்வேறு வதந்திகள் பரவுவதற்கு முக்கிய காரணமாகி விட்டது. காரணம், அந்த போட்டோவில் 3 இயக்குனர்கள் இருந்தனர். அதை வைத்து, அஜித் குமாரின் அடுத்த 3 படங்களின் இயக்குனர்கள் இவர்கள்தான் என்று கொளுத்தி போட்டுவிட்டனர். ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களுக்கு பிறகு அஜித் குமார் நடிக்கும் ‘ஏகே 64’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை, ‘குட் பேட் அக்லி’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது வெளிநாட்டில் நடக்கும் கார் பந்தயங்களில் அஜித் குமார் பங்கேற்று வருவதால், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, அஜித் குமார் தனது அடுத்த 2 படங்களின் இயக்குனர்களை தேர்வு செய்துவிட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. ஏகே 65, ஏகே 66 ஆகிய படங்களின் இயக்குனர்கள் என்று ‘சிறுத்தை’ சிவா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரை அஜித் குமார் தேர்வு செய்துள்ளதாகவும், அதனால்தான் அந்த போட்ேடாவை அஜித் குமாரின் மேனேஜர் வெளியிட்டு இருப்பதாகவும் நெட்டிசன்களும், ரசிகர்களும் சொல்லி வருகின்றனர்.

இத்தகவலில் உண்மை இல்லை. கடந்த மே மாதம் அஜித் குமாரின் பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ‘சிறுத்தை’ சிவா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் அஜித் குமாரை சந்தித்தபோது எடுத்த போட்டோ அது. ‘தீனா’ படத்தில் அஜித் குமாரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். பிறகு அவர்கள் இணையவில்லை. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் அஜித் குமாரை ‘சிறுத்தை’ சிவா இயக்கி இருந்தார். 5வது முறையாக அவர்கள் இணைவதாக இதற்கு முன்பு கூறப்பட்டது. ஆனால், தற்போது ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.