தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சாய் பல்லவி படம் திடீர் மாற்றம்

 

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது ரன்பீர் கபூருடன் ‘ராமா யணா’ என்ற 2 பாகங்கள் கொண்ட இந்தி படத்தில் சீதை வேடத்தில் நடிக்கும் அவர், ஆமிர் கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக ஏற்கனவே ஒரு இந்தி படத்தில் நடித்துள்ளார். சுனில் பாண்டே இயக்கிய காதல் கதை கொண்ட இப்படத்துக்கு ‘ஏக் தின்’ என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில், திடீரென்று அப்பெயர் ‘மேரே ரஹோ’ என்று மாற்றப்பட்டு உள்ளது.

படப்பிடிப்புக்காக தற்காலிகமாக வைக்கப் பட்ட தலைப்பு ‘ஏக் தின்’ என்றும், ‘மேரே ரஹோ’தான் படத்தின் இறுதியான தலைப்பு என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். இதன் முக்கிய காட்சிகள் ஜப்பான் சப்போரா பனி திருவிழாவில் படமாக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வரும் என்று சொல்லப்பட்ட இப்படம், தற்போது வரும் டிசம்பர் 12ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.