ஒரு விநாடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம்
சில முன்னணி நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். அதோடு, விளம்பர படங்களில் நடித்து அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அந்தவகையில், தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நயன்தாரா, ஒரு விளம்பரத்தில் நடிக்க விநாடிக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துகொண்டு, வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து, அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயரிட்டுள்ள நயன்தாரா, பல லட்ச ரூபாய் செலவு செய்து தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து, அடிக்கடி தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி ட்ரிப் சென்று வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவின் பிரபல டிஷ் நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஒரு விநாடிக்கு 10 லட்ச ரூபாய் வீதம், மொத்தம் 50 விநாடிகளுக்கு 5 கோடி ரூபாய் வரை நயன்தாரா சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விளம்பர படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 2 நாட்களில் படமாக்கப்பட்டது.