தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சமந்தா படத்தால் மயங்கிய இயக்குனர்

மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் மகத்தான சாதனை படைத்த ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவருக்கு இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்ற பெருமையும் இருக்கிறது. தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு, முன்னாள் உலக...

மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் மகத்தான சாதனை படைத்த ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவருக்கு இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்ற பெருமையும் இருக்கிறது. தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வரும் பான்வேர்ல்ட் படத்தை இயக்கி வரும் அவர், இப்படத்தை முடித்துவிட்டு, மகாபாரத கதையை மையமாக வைத்து, 10 பாகங்கள் கொண்ட படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதன் தயாரிப்பாளர் யார் என்ற விவரத்தை அவர் சொல்லவில்லை.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசும்போது, தனக்கு மிகவும் பிடித்த படம் குறித்து குறிப்பிட்டுள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி கூறுகையில், ‘இதுவரை ‘பாகுபலி’, ‘மாவீரன்’ உள்பட ஏராளமான படங்களை நான் இயக்கி இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த படம் என்று, ‘நான் ஈ’ என்ற படத்தை மட்டுமே சொல்வேன். எனது மற்ற படங்களை விட இப்படம்தான் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படமாகும். நிறைய அனுபவங்களும், மறக்கவே முடியாத அழகான நினைவுகளும் இப்படத்தில் இருக்கிறது. அதற்கு முன்பு வரை, நான் ஆக்‌ஷன் படங்களை இயக்க மட்டுமே லாயக்கு என்று பலர் நினைத்திருந்தனர். அதற்கு மாற்றாக ‘ஈகா’, ‘நான் ஈ’ ஆகிய படங்களை இயக்கி, என்னால் மற்ற ஜானரிலும் படத்தை இயக்க முடியும் என்று நிரூபித்தேன்’ என்றார். இப்படத்தில் சமந்தா, நானி, சந்தானம், கிச்சா சுதீபா நடித்திருந்தனர். கடந்த 2012ல் படம் வெளியானது.