தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பாம்பு செயின் அணிந்த சமந்தா, கீர்த்தி சுரேஷ்

 

 

தென்னிந்திய படவுலகில் கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படம் தோல்வியை தழுவியதால், அடுத்தடுத்து நல்ல கதைகளை கேட்டு வருகிறார். தமிழில் கடைசியாக அவர் நடித்த ‘ரகு தாத்தா’ என்ற படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அடுத்து ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு தனது 15 ஆண்டு கால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கோவாவில் விமரிசையாக நடந்தது. இதில் திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு சில பட நிகழ்ச்சிகளுக்கும், பொதுவெளியிலும் கழுத்தில் தாலியுடன் வலம் வந்தார் கீர்த்தி சுரேஷ். திருமணமான சில நாட்களிலேயே தனது தாலியை அவர் கழற்றி வைத்தது பேசுபொருளானது. பிறகு பாலிவுட் நடிகைகளின் கிளாமர் லுக்கிற்கு சமமான ஆடைகளை அணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார். அந்தவகையில் மும்பையில் நடந்த நகை கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கிளாமராக உடையணிந்து கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின்போது எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷை பார்த்து பலரும் வியந்து, டிரோல் செய்ய தொடங்கியுள்ளனர்.

அதில், கிளாமர் உடையில் பாம்பு உருவம் போன்ற செயின் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், திருமணத்தின்போது அணிந்த தாலியை கழற்றிவிட்டு, இப்போது பாம்பு செயின் அணிந்துள்ளார் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இதே நிகழ்ச்சியில் நடிகைகள் சமந்தா, மிருணாள் தாக்கூர், தமன்னா, திரிப்தி டிம்ரி, பிரியங்கா சோப்ரா உள்பட பலர் கலந்துகொண்டு பாம்பு உருவம் போன்ற செயின் மற்றும் விதவிதமான ஆடை அணிந்து போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை பகிர்ந்துள்ளனர். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.