சாம்ஸ் பெயரில் திடீர் மாற்றம்
சந்திரபாபு சாயலில் இருந்தாலும், தனித்துவமான காமெடி நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர், சாம்ஸ். பல வருடங்களாக இப்பெயரால் அறியப்பட்டு வந்த அவர், நேற்று திடீரென்று தனது பெயரை மாற்றிவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது இயற்பெயர் சுவாமிநாதன். நடிக்க வந்த பிறகு தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக, ‘சாம்ஸ்’ என்று மாற்றிக்கொண்டேன். இப்பெயரில் பல வருடங்களாக நடித்து வந்தேன். சிம்புதேவன் இயக்கிய ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ என்ற கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால்,
அப்பெயரிலேயே ரசிகர்கள் என்னை அழைப்பதும், அதை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்குவதும், நெருக்கமானவர்கள் அசுர வளர்ச்சி அடைந்தால் ‘ஜாவா சுந்தரேசன்’ என்று அழைப்பதும் வாடிக்கையாகி விட்டது. மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம் என்பதை ஏற்று, அக்டோபர் 2ம் தேதி முதல் எனது பெயரை, சிம்புதேவன் அனுமதியுடன் ‘ஜாவா சுந்தரேசன்’ என்று மாற்றிக்கொள்கிறேன்’ என்றார்.