சம்யுக்தாவுக்கு அடித்த ஜாக்பாட்
மலையாளத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘பாப்கார்ன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். அதன் பிறகு ‘களரி’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் ‘ஜூலை காற்றில்’ என்ற படத்தில் நடித்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான ‘வாத்தி’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்த சம்யுக்தா மேனன் தற்போது தமிழில் ‘பென்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய எல்சியு பட வரிசையில் உருவாகிறது. இந்நிலையில், தற்போது சம்யுக்தா மேனன் கைவசம் உள்ள 6 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
நந்தமுரி பாலகிருஷ்ணா ஜோடியாக இவர் நடித்துள்ள ‘அகண்டா 2’ வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது. ‘மகாராணி: குயின் ஆஃப் குயின்ஸ்’ என்ற இந்தி படம் டிசம்பரில் வெளியாகிறது. நிகில் சித்தார்த்தா ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள ‘சுயம்பு’ என்ற படம் அடுத்தாண்டு பிப்ரவரி 13ம் தேதி வெளியாகிறது. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட ‘நாரி நாரி நடும முராரி’ கோடை விடுமுறையில் வெளியாகிறது. இதுமட்டுமின்றி புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்திலும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘ராம்’ என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சம்யுக்தா மேனன். இந்த படங்கள் அடுத்தாண்டு மத்தியில் அல்லது இறுதியில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.
