தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நிர்வாண காட்சியில் பிரபாஸ்

மும்பை: ‘ஸ்பிரிட்’ பான் இந்தியா படத்தில் நிர்வாண காட்சியில் பிரபாஸ் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. அதே படத்தை இந்தியில் ‘கபீர் கான்’ பெயரில் இயக்கினார். பிறகு ரன்பீர் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தை இயக்கினார். இப்போது பிரபாஸ், திரிப்தி டிம்ரி நடிப்பில் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை பல மொழிகளில் இயக்க உள்ளார். ஏற்கனவே ‘அனிமல்’ இந்தி படத்தில் திரிப்தி டிம்ரியை நிர்வாண காட்சியில் சந்தீப் ரெட்டி வங்கா நடிக்க வைத்தார். இப்போது ‘ஸ்பிரிட்’ படத்திலும் அவர் நிர்வாண காட்சியை வைத்திருக்கிறார். ஆனால் இதில் திரிப்தி டிம்ரிக்கு பதிலாக பிரபாஸை நிர்வாணமாக நடிக்க வைக்கிறாராம். இது பற்றி அறிந்த பிரபாஸ், இந்த காட்சியை ஏஐ மூலம் உருவாக்கிக் கொள்ளலாம் என ஆலோசனை கூறியிருக்கிறார். ஆனால் சந்தீப் ரெட்டி வங்கா, அதை ஏற்கவில்லையாம். நீங்களே நடிக்க வேண்டும் என பிரபாஸை வற்புத்தியுள்ளாராம். பிரபாசும் இதற்கு சம்மதம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.