தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சந்தோஷ் பிரபாகரின் லூ

சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்த மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தை ‘லூ’ திரைப்படம் பேசுகிறது. பல்வேறு ஆவண படங்களை தயாரித்து இயக்கிய கோகுல்ராஜ் மணிமாறன் இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். பல்வேறு நிஜ சம்பவங்களை உள்வாங்கி அதை மிகச்சிறந்த படமாக உருவாக்கி இருக்கிறார். ஹரா, கிறிஸ்டினா கதிர்வேலன் உட்பட பல படங்களில் பணிபுரிந்த பிரகத் முனியசாமி ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் சர்வதேச விருதுகள் வழங்கும் விழாக்களில் பங்கேற்க உள்ள இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளை முன்னிட்டு ‘லூ’ படத்தின் முதல் லுக்கை தயாரிப்பாளரும் நடிகர் இயக்குனருமான தியாகராஜன் வெளியிட்டார். சந்தோஷ் பிரபாகர், கிலைட்டன், அலெக்ஸ்பாண்டியன், வைணவஸ்ரீ, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். பிரேமலதா முருகானந்தம் தயாரித்துள்ளார்.