தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சொந்த ஊரான தசவாராவில் சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பெங்களூரு, ஜூலை 16: பெங்களூருவில் நேற்று காலமான பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவியின் உடல், அவரது சொந்த ஊரான தசவார கிராமத்தில் அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் நடிகை பி.சரோஜாதேவி, நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் காலமானார். அவரது உடல் பெங்களூரு மல்லேஷ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில்...

பெங்களூரு, ஜூலை 16: பெங்களூருவில் நேற்று காலமான பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவியின் உடல், அவரது சொந்த ஊரான தசவார கிராமத்தில் அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் நடிகை பி.சரோஜாதேவி, நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் காலமானார். அவரது உடல் பெங்களூரு மல்லேஷ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர்கள் சிவராஜ்குமார், பிரகாஷ்ராஜ், உபேந்திரா, சாதுகோகிலா, நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜக்கேஷ், இயக்குனர் யோகராஜ்பட், நடிகைகள் காஞ்சனா, தாரா அனுராதா, மாலாஸ்ரீ, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அஞ்சலி செலுத்தினர்.

மல்லேஷ்வரத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நேற்று அதிகாலை முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சரோஜாதேவியின் உடல் ஊர்வலமாக பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னபட்டன தாலுகா, தசவார கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கிராமத்தில் உள்ள குடும்ப பண்ணை தோட்டத்தில் சரோஜாதேவியின் தாய் ருத்ரம்மா சமாதி அருகில் ஒக்கலிக வகுப்பினரின் வழக்கப்படி சம்பரதாய பூஜைகள் செய்யப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டதை தொடர்ந்து, முழு அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.