‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!
“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக Zee5 தளத்தில் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் நடிகர் சரவணன் பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம், சட்டமும் நீதியும் இவ்வளவு உயரம் சென்றதற்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 90 களில் நான் ஹீரோவாக வந்த போது, அத்தனை பத்திரிக்கையாளர்களும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். இந்த சீரிஸ் வெற்றிபெற்ற பிறகும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிரபாகரனுக்கு அவர் மனைவிக்கும் என் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்போது தெலுங்கிலும் இது டாப்பாகி கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.
இயக்குநர் பாலாஜி செல்வராஜ் பேசியதாவது…
பத்திரிக்கை சினிமா ஊடகங்களுக்கு நன்றி. சூரி அண்ணா தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். தயாரிப்பாளர் பிரபாகரன், சசிகலா பிரபாகரன் இருவரும் இந்த சீரிஸிற்காக அவ்வளவு உழைத்துள்ளார்கள். சரவணன் சார் அவரை கம்படபிளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் தான் எங்களை பார்த்துக்கொண்டார் அவருக்கு நன்றி. நம்ரிதா அருமையாக நடித்துத் தந்தார். என் நண்பர் கேமராமேன் கோகுல், இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி, இந்த படைப்பை வெற்றியாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி.
நடிகை நம்ரிதா பேசியதாவது..,
மீடியா நண்பர்களுக்கு நன்றி. இதை நல்ல அனுபவமாக மாற்றியது நீங்கள் தான். எங்களுக்கு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. பாலாஜி சார் இதை அருமையாக எடுத்ததற்கு நன்றி. பிரபாகர் சார் இப்போது வரை உழைத்துக் கொண்டுள்ளார். சரவணன் சார் மிகச்சிறந்த மனிதர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எங்களுடன் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் நன்றி.
நடிகர் அரோல் D சங்கர் பேசியதாவது..,
விடியும் முன் படத்திலிருந்து இயக்குநர் பாலாஜியைத் தெரியும். அங்கு ஆரம்பித்த பயணம், இங்கு வரை வந்தது மகிழ்ச்சி. பிரபாகரன் அவரை முதலில் அஸிஸ்டெண்ட் என நினைத்தேன். அண்ணா அண்ணா என அழைப்பா,ர் அவர் தான் தயாரிப்பாளர் என்றவுடன் நான் சார் என அழைக்க ஆரம்பித்துவிட்டேன். கடினமான உழைப்பாளி. நல்ல நடிகராக வரக்கூடியவர். நம்ரிதா ஹீரோயின் போலவே இருக்க மாட்டார். இயல்பாக இருப்பார். அழகாக நடித்துள்ளார். சரவணன் சார் இது பத்தாது, இன்னும் பெரிய அளவில் உங்களிடம் சண்டை போட வேண்டும், இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும். இந்த சீரிஸை பாராட்டி மக்களிடம் சேர்த்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
நடிகர் குப்புசாமி பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம், நான் நிறைய படங்களில் நடித்துள்ளேன், நான் நடிச்ச படங்கள் ரிலீஸாகது, ரிலீஸானால் ஓடாது. நான் முதலில் நடித்த படம் சட்டம் என் கையில், 34 வருட உழைப்புக்குப் பலனாக இந்த வெற்றி வந்துள்ளது. சட்டமும் நீதியும் எனக்கான திருப்புமுனையாக அமைந்துள்ளது. சூரி அண்ணா இயக்குநர் பாலாஜி சார் சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்து என்னை இந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்கள். மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வது பெரும் மகிழ்ச்சி. இந்த வெற்றிக்குத் துணையிருந்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் சௌந்தர் பேசியதாவது…
தயாரிப்பாளர் பிரபாகரன் என் மச்சான். நான் அவனை சினிமாவுக்கு வராதே என பலமுறை சொல்லி, சண்டை போட்டுள்ளேன். ஆனால் கேட்க மாட்டான். பிடிவாதமானவன், இந்த வெற்றி அவனது உழைப்பால் வந்தது. அவன் லட்சியம் மீது அவனுக்கு இருந்த வெறி தான் அவனை இங்கு கொண்டு வந்துள்ளது. இந்த சீரிஸை சின்ன பட்ஜெட்டில் எடுத்து, அதை அதற்கு அதிகமாக விளம்பரம் செய்து ஜெயித்திருக்கிறான். அவனுக்கு வாழ்த்துக்கள். இந்த சீரிஸை எடுத்துத் தந்த குழுவிற்கு வாழ்த்துக்கள். சரவணன் சித்தப்பு இந்த சீரிஸிற்கு முழு பலமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். 14 நாட்களில் எடுக்கப்பட்ட சீரீஸாக ‘‘ சட்டமும் நீதியும்’’ சிறப்பான கவனம் பெற்று தற்போது Zee5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.