தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஸ்கூல்: விமர்சனம்

இரண்டாவது இடத்திலுள்ள பள்ளியை முதலிடத்துக்கு கொண்டு வர, மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை ஹெட் மாஸ்டர் பக்ஸ் பகவதி பெருமாள் எழுதுகிறார். ஆனால், அதை படிக்கும் மாணவர்கள் எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகின்றனர். அப்போது பள்ளியில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. பள்ளியிலுள்ள அமானுஷ்ய சக்திகளை சாமியார் ஆர்.கே.வித்யாதரன் கண்டுபிடிக்கிறார். அப்போது முன்னாள் ஆசிரியர்கள்...

இரண்டாவது இடத்திலுள்ள பள்ளியை முதலிடத்துக்கு கொண்டு வர, மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை ஹெட் மாஸ்டர் பக்ஸ் பகவதி பெருமாள் எழுதுகிறார். ஆனால், அதை படிக்கும் மாணவர்கள் எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகின்றனர். அப்போது பள்ளியில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. பள்ளியிலுள்ள அமானுஷ்ய சக்திகளை சாமியார் ஆர்.கே.வித்யாதரன் கண்டுபிடிக்கிறார். அப்போது முன்னாள் ஆசிரியர்கள் யோகி பாபு, பூமிகா சாவ்லா பள்ளிக்கு மீண்டும் வர, அவர்களை பார்த்த அமானுஷ்ய சக்திகள் அமைதியாகின்றன. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. காமெடியை கச்சிதமாக கையாண்டு, குணச்சித்திர நடிப்பில் ஆசிரியர் யோகி பாபு கவனத்தை ஈர்த்துள்ளார்.

வெற்றி, தோல்வி மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற அறிவுரையை மாணவர்களுக்கு வழங்கும் பூமிகா சாவ்லாவின் கேரக்டர் சிறப்பு வாய்ந்தது. கே.எஸ்.ரவிகுமார், பக்ஸ் பகவதி பெருமாள், சாம்ஸ், நிழல்கள் ரவி, ஆர்.கே.வித்யாதரன், ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். கதைக்கேற்ற பாடல்களை எழுதியுள்ள இளையராஜா, பின்னணி இசையின் மூலம் கதையின் நகர்வுக்கு பேருதவி செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜின் பணியும் யதார்த்தமாக இருக்கிறது. காட்சிகளின் நீளத்தை எடிட்டர் ராகவ் அர்ஸ் குறைத்திருக்கலாம். வாழ்க்கையை சுலபமாக எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற கருத்தை மாணவ, மாணவிகள் மனதில் அழுத்தமாக பதிவு செய்துள்ள இயக்குனர் ஆர்.கே.வித்யாதரன், அமானுஷ்ய விஷயத்தை புகுத்தியதை சற்று மாற்றி யோசித்திருக்கலாம்.