உருட்டு உருட்டு விமர்சனம்...
கஜேஷ் சிறுவயதியில் விளையாட்டில் நண்பனுடன் ஏற்பட்ட பகை வளர்ந்தும் தொடர்ந்து வருகிறது. கஜேஷ்யை பழி வாங்குவதற்காக நாயகி ரித்விகாவை தவறாக பேசியதாக கூறி கஜேஷ் பேசிய வீடியோவை காட்ட கோபப்பட வேண்டிய நாயகி கஜேஷ்யை காதலிக்கிறார். இந்நிலையில் கஜேஷ் ரித்விகா காதல் விவகாரம் நாயகி அப்பாவிற்கு தெரிய வர ஊர் திருவிழாவில் கஜேஷ்யை கொலை செய்ய முடிவு எடுக்கிறார்.
கஜேஷ் சிறுவயது நண்பனும் கொலை செய்ய முடிவு எடுக்கிறார். இதனையடுத்து கஜேஷ் ஊர் திருவிழாவின் போது காணாமல் போகிறார். இறுதியில் காணாமல் போன கஜேஷ் கிடைத்தாரா? இல்லையா? கஜேஷ் ரித்விகா இருவரின் காதல் கை கூடியதா? இல்லையா? என்பதே ’உருட்டு உருட்டு’ படத்தின் மீதிக்கதை. கஜேஷ் நாகேஷ் மது பழக்கத்திற்கு அடிமையானவராக யதார்த்த நடிப்பபை கொடுத்திருக்கிறார்.
ரித்விகா ஸ்ரேயா அறிமுக நாயகி போல இல்லாமல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமியாக சிரிக்க வைத்திருக்கிறார். சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
அருணகிரியின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை. கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசை பரவாயில்லை. யுவராஜ் பால்ராஜ், ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. மது பழக்கத்திற்கு ஆளான ஒருவருடைய வாழ்க்கை எந்த நிலைக்கு செல்கிறது என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சதாசிவம்.